திருப்பணி.காம்
திருப்பணி.காம் என்பது மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளையும், அமுதன் விளம்பர நிறுவனமும் சேர்ந்து எடுக்கும் ஓர் புதிய முயற்சியாகும். இந்த இணையதளத்தின் பிரதான நோக்கமானது பொருளாதாரத்தாலும், காலத்தாலும் சிதலமடைந்துள்ள திருக்கோயில்களில் உழவாரம், அன்னதானம், தினசரி பூஜைகள், திருவிழாக்கள், கோயில் திருப்பணிகள், கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெறும் பொருட்டு அவற்றை ஆன்மீக அன்பர்களிடையேயும், நன்கொடையாளர்கள், கொடை வள்ளல்களுக்கும் சென்று சேர்த்து திருக்கோயில்களும், சமயமும் மேம்படுத்துவதற்கு ஓர் சிறு துறும்பாக இருப்பதே ஆகும்.
எங்களின் ஒரே பிரதான நோக்கமானது "சமயம் காப்போம்" "சமுதாயம் காப்போம்" என்ற அடிப்படையில் இந்த இலக்கை உலகம் முழுதும் உள்ள இந்துக்களுக்கு கொண்டு சென்று இந்து தர்மத்தை காப்பதே ஆகும்.
Thirupani.com
Thirupani.com is an initiative taken by Mankind & Environment Efflorescence Trust with the Help of Amudhan Advertising Agency to perform divine services such as Uzhavaram, Annadhanam, Regular Poojas, Festivals, Temple Renovation and Kumbabishekam towards Temples suffer under paucity of funds and available at remote Village / Outskirts of Town and to create Corpus fund through Sponsors/ Members/donors for Maintenance related activities in Ancient Temples.
Our one and only aim is to propagate "SAVE RELIGION" "SAVE SOCIETY" to reach every Hindus in and around the World to protect the Hindu Dharma.
எங்களுடைய செயல்பாடுகள்
- தினசரி பூஜைகள் நடைபெற பூ, எண்ணெய் வழங்குவது
- ஆச்சார்யார்கள், ஓதுவார்கள், புலவர்களுக்கு உதவுவது
- சுவாமிகளுக்கு வேட்டி, துண்டு, புடவைகள் வழங்குவது
- அபிஷேகம், ஹோமங்கள் நடைபெறுவதற்கு பொருட்கள் வழங்குவது
- திருவிழாக்காலங்களில் அன்னதானம் வழங்குவது
- தினசரி பிரசாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது
- கோயில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகத் திருப்பணிகளில் பங்குகொள்வது
- போர் அல்லது பைப் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க வழி செய்வது
- திருக்கோயில்கள், தண்ணீர் தொட்டி, பூஜை சாமான்களை சுத்தம் செய்வது
- திருக்கோயில் தலவரலாறு அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்கு வழி செய்வது
- தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் இன்னிசை வகுப்புகள் நடத்துவது
- திருக்கோயில் பற்றிய விளம்பரப் பலகை, பெயர் பலகை அமைத்து தருவது
- தினசரி வழிபாட்டிற்குரிய பாடல்கள் கொண்ட புத்தகங்களை அச்சிட்டு வழங்குவது
- ஆன்மீக சொற்பொழிவு, வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் நடத்துவது
- பரதநாட்டியம், இன்னிசைக்கச்சேரி, நாடகம் போன்றவை நடத்துவது
- மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது
Our Activities
- Regular Pooja Expenses such as Flower, Deepam Oil,...
- Aid to Priest / Pundits / Odhuvars / Pulavars
- Vastharam / Cloth Materials for Temples
- Abishekam / Homam Materials for Temples
- Provide Annadhanam on festival occasions
- Regular Prasadam Expenses
- Support on Temple Renovation and Kumbabishekam
- Water Arrangements – Bore well / Pipe Line etc..
- Cleaning of Temple Premises / Tanks / Pooja Articles
- Printing of Sthala Puranams / History of the Temple
- Organising Thirumurai Isai / Divya Prabhanda Isai
- Arrangements for Name Boards / Hoardings
- Printing & Donating Parayanam Material
- Organising Religious Lectures / Speeches
- Organising Festivals / Cultural Performances
- Organising competition among students